சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவிவருகிறது. மேலும், இரு நாட்டு எல்லைப்பகுதியில் ஈரான் நாட்டின் ஆதரவுபெற்ற சிரியா கிளர்ச்சியாளர்கள், ஈரான் புரட்சிப்படை பிரிவினர் பலர் பதுங்கியுள்ளனர்.
இவர்கள் சிரியாவில் இருந்தவாறு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திவருகின்றனர். இவர்களை அழிக்க இஸ்ரேல் ராணுவம் சிரியாவில் அவ்வப்போது விமான படைகள் தாக்குதல் நடத்துவதுண்டு.
அந்த வகையில், நேற்றிரவு (ஏப்ரல் 7) சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸை நோக்கி, பல்வேறு ஏவுகணைகளை இஸ்ரேல் ராணுவம் ஏவியுள்ளது. இதில், பல ஏவுகணைகள் சிரியாவின் வான்வழிப் பாதுகாப்பு அம்சத்தால், வானிலே சுட்டு வீழ்த்தப்பட்டது.
இருப்பினும், லெபனான் பகுதியில் ராணுவ நிலை அருகே, ஏவுகணை ஒன்று, வெடித்ததில் நான்கு வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் தரப்பில் எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: கோவிட்-19 பிடியில் சிக்கித் தவிக்கும் பிரேசில்; ஒரே நாளில் 4,000 பேர் உயிரிழப்பு