மத்திய கிழக்கு நாடான சிரியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அலெப்போ மாகாணத்தில் உள்ளது அர்-ராய் கிராமம். இந்நிலையில், இக்கிராமத்தில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் திடீரென பயங்கர சத்தத்தோடு குண்டு வெடித்தது. இதில், நிகழ்விடத்துக்கு அருகே இருந்த 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 23 பேர் காயமைடந்தனர்.
சிரியா-துருக்கி எல்லை அருகே அமைந்துள்ள இந்தக் கிராமமானது துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த எட்டு வருடங்களாக சிரியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் குண்டு வெடிப்பு : 11 பேர் உயிரிழப்பு! - syria car explosion
தமாஸ்கஸ்: சிரியாவின் அலெப்போ (Allepo) மாகாணத்தில் கார் ஒன்றில் குண்டு வெடித்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

Conclusion: