வடகிழக்கு சிரியாவில் அமெரிக்க விமானப் படையினர் நேற்று(அக்.23) MQ-9 விமானம் மூலம் வான்வெளித்தாக்குதல் நடத்தினர். அங்கு அல்கொய்தா பயங்கரவாதிகள் பதுங்கிருப்பதாக அமெரிக்க படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில், அல்கொய்தாவின் முக்கிய தளபதி அப்துல் ஹமித் அல்-மதார் உயிரிழந்தார். இதை அமெரிக்க ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்கா ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அல்கொய்தா அமைப்பு தன்னை மீண்டும் கட்டமைத்துக்கொள்ள சிரியா பிராந்தியத்தை பயன்படுத்திவருகிறது.
சிரியாவை மையமாகக் கொண்டு அந்நாட்டிலும், அண்டை நாடுகளான ஈராக்கிலும் அல்கொய்தா தனது தடத்தை பதிக்கத் தொடங்கியுள்ளது. அல்கொய்தா அமைப்பை குறிவைத்து அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி அமைப்பை வேரோடு வீழ்த்த உறுதிபூண்டுள்ளது எனக் கூறியுள்ளது.
இதையும் படிங்க: TRUTH Social - புதிய சமூக வலைதளம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் ட்ரம்ப்