ஈராக் வெளியுறவுத் துறை அமைச்சர் ஃபுவாட் ஹுசைன் ஞாயிற்றுக்கிழமை பாக்தாத்திற்கு வந்த பின்னர் தனது ஈரானிய பிரதிநிதி முகமது ஜவாத் ஜரீப்பை சந்தித்து பேசினார், அப்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடினர்.
இதனைத்தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர், "ஈராக்கின் உள் விவகாரங்களில் தலையிடாமல், பரஸ்பர நலன்களை அடிப்படையாகக் கொண்ட அனைத்து அண்டை நாடுகளுடனும் சமச்சீர் உறவை நாங்கள் விரும்புகிறோம்" என்று ஹுசைன் கூறினார்.