மே 12ஆம் தேதி, பாரசீக வளைகுடாவில் சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு எந்தத் தரப்பும் பொறுப்பு ஏற்காத நிலையில், ஈரான்தான் இந்தத் தாக்குதலை அரங்கேற்றியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது.
இதைத் தொடர்ந்து, இரண்டு நாட்கள் கழித்து சவுதி அரேபியாவின் எண்ணெய்க் குழாய்கள் மீது ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலில், சிறிதளவு சேதமடைந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஏமன் தலைநகர் சனாவில் சவுதி வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில், ஆறு பேர் கொல்லப்பட்டனர், ஏராளமானோர் காயமடைந்தனர்.
ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவளித்துவருவதால், ஈரான்-சவுதி இடையே பதற்றமான சூழல் நிலவிவருகிறது.
இந்நிலையில், சவுதி வெளியுறவுத் துறை அமைச்சர் அப்தெல் அல் ஜுபேர், 'ஈரானுடன் நாங்கள் போரிட விரும்பவில்லை. போரை தடுப்பதற்கான எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
அதேவேலையில், ஈரான் அரசுக்கு போர்தான் வேண்டுமென்றால், முழுமூச்சுடன் அந்நாட்டுக்கு பதிலடி கொடுக்க சவுதி அரசு தயங்காது' என எச்சரித்தார்.