'ஒன்பதாவது ஆசிய அமைச்சர்கள் உச்சி மாநாடு' தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேவில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆசிய கண்டத்தில் அமைதிக்கான தேவை குறித்து பேசினார்.
அப்போது, ஆப்கானிஸ்தான் அமைதி ஒப்பந்தத்தை குறிப்பிட்டு பேசிய அவர், ஆசியாவில் இரட்டை விதமான அமைதி தேவைப்படுகிறது. ஒன்று ஆப்கானிஸ்தானுக்குள் அமைதி மற்றொன்று ஆப்கானிஸ்தானை சுற்றியிருக்கும் பிராந்தியத்திலான அமைதி.
இந்த அமைதி ஒப்பந்தம் வெற்றிபெற வேண்டும் என்றால், இதில் பேச்சுவார்த்தை நடத்தும் அனைத்து தரப்பும் தொடர்ந்து நம்பிக்கையான முறையில் செயலாற்ற வேண்டும். இது நிச்சயம் நல்ல அரசியல் தீர்வை தரும்.
தலிபான்-ஆப்கானிஸ்தான் அரசுக்கு இடையே நடைபெற்ற 20 வருடப் போருக்கு இந்தப் பேச்சுவார்த்தை தீர்வாக அமையும் என நம்புகிறேன் என ஜெய்சங்கர் பேசியுள்ளார். இந்த பயணத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாட்டின் முன்னணி தலைவர்களை சந்தித்து அமைச்சர் ஜெய்சங்கர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மோடி, பினராயி, அதானி இடையே ரகசிய உடன்படிக்கை - காங். குற்றச்சாட்டு