இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்துவருகிறது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதியின் எல்லைப் பகுதியில் இருக்கும் இஸ்ரேல் படையினரை வெளியேற வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இத்தகைய சூழலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவின் பேரில் ஹமாஸ் படையினருக்கு சொந்தமான ஆயுதக்கிடங்கு, தொழிற்சாலை உள்ளிட்டவற்றை குறிவைத்து 600 ராக்கெட் மூலம் சுமார் 36 மணி நேரத்திற்கும் மேலாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் பெருத்த சேதம் ஏற்பட்டதோடு, 24 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், வெஸ்ட் பாங்க், காஜா ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 80 மில்லியன் டாலர்கள் உதவித்தொகை வழங்குவதாக கத்தார் அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 300 மில்லியன் டாலர் தொகையை சுகாதாரம், கல்வி ஆகியவற்றிற்கு வழங்குவதாகவும், மீதமுள்ள 180 மில்லியன் டாலர் உடனடி நிவாரணமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.