அக்டோபர் 6 ஆம் தேதி, ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த கிறிஸ்துவ பாதிரியார் வாடிக்கனில் உள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸை சந்தித்து பேசியுள்ளார்.
இந்நிலையில், போப் ஆண்டவரை சந்திப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், அவர் அதை மறைத்து சகஜமாக வெளியில் சுற்றித்திரிந்துள்ளார். பின்னர், அக்டோபர் 9 ஆம் தேதி சிட்னியில் பரிசோதனை செய்கையில், கரோனா தொற்று பாதிப்பு உள்ளது உறுதியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, அவரை வீட்டு தனிமைப்படுத்தலில் ஆஸ்திரேலியா சுகாதார துறையினர் வைத்துள்ளனர்.
எனவே, தற்போது போப் ஆண்டவர் பிரான்சிஸூக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதுமட்டுமின்றி, கிறிஸ்துவ பாதிரியுடன் தொடர்பில் இருந்த நபர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி இருக்கும்ப்படி ஆஸ்திரேலியா சுகாதார துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.