ETV Bharat / international

பாலஸ்தீனத்திற்கு சூடான் துரோகம் இழைத்துவிட்டது!

author img

By

Published : Oct 24, 2020, 5:21 PM IST

ரமல்லா: இஸ்ரேலுடனான உறவை சீராக்க சூடான் எடுத்த முடிவென்பது எங்கள் நாட்டிற்கு இழைத்த துரோகமென பாலஸ்தீன அதிபர் மஹ்மது அப்பாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாலஸ்தீனத்திற்கு சூடான் துரோகம் இழைத்துவிட்டது !

அமெரிக்காவின் முயற்சியால் ஏற்பட்ட அமைதி ஒப்பந்த அடிப்படையில் இஸ்ரேல் மீதான வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து தடைகளையும் நீக்குவதாக சூடான் அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

1948ஆம் ஆண்டில் இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்ட நாள் முதல் அந்நாட்டுக்கும், வளைகுடா நாடான சூடானுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்துக்கொண்டே வந்தது.

இதன் காரணமாக இஸ்ரேல்-சூடான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதாரம், ராஜாங்கம், தூதரகம் உள்பட எந்தவித உறவுகளும் இல்லாமல் இருந்தது. மேலும், விமான போக்குவரத்து, வர்த்தகம் உள்பட அனைத்து விதமான உறவுகளும் தடைசெய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், இருநாடுகளுக்கும் இடையிலான பிரச்னைகளைத் தீர்க்க முடிவெடுத்த அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தீவிர முயற்சியை மேற்கொண்டது.

அதனடிப்படையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, சூடானின் இறையாண்மை கவுன்சில் தலைவர் அப்தெல் பத்தா அல் புர்ஹான், பிரதமர் அப்தல்லா ஹம்டோக் ஆகியோர் ட்ரம்பின் ஒருங்கிணைப்பில் கலந்துரையாடினர்.

இதன் விளைவாக விரைவில் இருநாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூடானின் ஆணையை பாலஸ்தீன மக்களுக்கு செய்த துரோகச்செயல் என பாலஸ்தீன அதிபர் மஹ்மது அப்பாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாலஸ்தீன விடுதலை அமைப்பின் (பி.எல்.ஓ.) செயற்குழு உறுப்பினர் வசல் அபு யூசப் கூறுகையில், "சூடானின் இந்த முடிவானது பாலஸ்தீன மக்களின் முதுகில் குத்துவதற்கு ஒத்தது.

எங்கள் பாலஸ்தீன மக்களின் நியாயமான நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்க பாலஸ்தீனிய மக்களின் தலைமை தேவையான முடிவுகளை எடுக்கும்" என்றார்.

மற்றொரு போராளி இயக்கமான காசாவின் ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் ஹசீம் கஸ்ஸெம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சூடானுக்கும் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் அரசுக்கும் இடையிலான இந்தப் புதிய உறவானது சர்வதேச அரசியலின் நிகழ்நிரல் படியே திட்டமிடப்படுகிறது. தங்களின் அரசியலுக்கான சூடான் நமது பாலஸ்தீனிய மக்களுக்கும் அவர்களின் நியாயமான கோரிக்கைக்கு தீங்கு செய்ய வைத்துவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்திற்கு ஆதரவான அரசு பட்டியலில் இருந்து நீக்கிய அமெரிக்காவுக்கு கைமாற, சூடான் அரசு இந்த திடீர் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக புவிசார் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.