உலகளவில் கரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணாமாக பலர் உயிரிழந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கரோனா தொற்று பலமாக உருமாற்றம் அடைந்தது. அதற்கு ஒமைக்ரான் என்று பெயரிடப்பட்டது. அந்த பாதிப்புகளில் இருந்தே இன்னும் மக்கள் மீளமுடியாமல் தவித்து வருகின்றனர்.
தற்போது, சைப்ரஸ் நாட்டில் ‘டெல்டாக்ரான்’ என்ற உருமாற்றமடைந்த புதிய வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த உருமாற்றம் அடைந்த வைரஸில், டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ்களின் பண்புகள் ஒத்திருப்பதாக கூறப்படுகிறது.
அதனால் இதற்கு ‘டெல்டா கிரான்’என்று பெயரிடப்பட்டுள்ளதாக சைப்ரஸ் பல்கலைக்கழக உயிரியல் அறிவியல் பேராசிரியர் லியோண்டியோஸ் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வகை தொற்றினால் 25 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும், இதனுடைய தீவிரத் தன்மை குறித்து உடனடியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா பிடியில் நாடாளுமன்றம்; 400 பேர் பாதிப்பு