பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள குவாடர் மாவட்டம் ஒர்மாரா பகுதியில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு மேம்பாட்டு நிறுவனம் அருகில் பயங்கரவாதிகள் அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.
அப்போது பாதுகாப்பு பணியிலிருந்த ராணுவ வீரர்கள் ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும் தொழிலாளர்கள் ஏழு பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து குவாடர் காவல்துறையினர் கூறுகையில், "இது ஒரு திட்டமிட்ட தாக்குதல், கராச்சிக்கு குவாடர் வழியாக ராணுவ வாகனங்கள் செல்லவிருப்பது முன்கூட்டியே அவர்கள் அறிந்துள்ளனர்.
எரிவாயு தொழிற்சாலையிலிருந்து ராணுவ வாகனங்கள் வெளியேறிய போது பாயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் தொழிலாளர்கள், ராணுவ வீரர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். கூடுதலாக ராணுவ வீரர்கள் இருந்ததால் ராணுவ வாகனங்கள் பாதுகாப்பாக சென்றன" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல் தடுக்கப்பட்டுள்ளது - இந்திய ராணுவம்