அரசில் ஊழல் நிறைந்துகிடப்பதாகவும் அதனால் பிரதமர் சாத் ஹரிரி உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் லெபனான் நாட்டில் இரண்டு வாரங்களாகத் தொடர் போராட்டம் நடைபெற்றுவந்தது.
அதைத்தொடர்ந்து லெபனான் பிரதமர் சாத் ஹரிரி, தான் பதவி விலகுவதாக அறிவித்தார். இது குறித்து கூறிய அவர், "என்னால் உங்களிடமிருந்து இதை மறைக்கமுடியாது. என்னுடைய அரசியல் சகாக்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ளவிரும்புகிறேன், லெபனானை முன்னேற்றுவது மட்டுமே நமது தலையாய நோக்கமாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.
மேலும், இப்போது கிடைத்துள்ள பொன்னான வாய்ப்பையும் நாம் தவறவிடக் கூடாது என்றும் அவர் கூறினார். சாத் ஹரிரியின் ராஜினாமாவைத் தொடர்ந்து பெய்ரூட்டில் போராட்டக்கார்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
ஆனாலும் பிரதமரின் இந்த திடீர் அறிவிப்பால் பெய்ரூட் முழுவதும் குழப்பத்தில் உள்ளது. இதனால் நடைபெறும் கலவரங்களைக் கட்டுப்படுத்த ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதலீடுகளைக் குறிவைக்கும் மோடியின் அரேபிய பயணம்