இது தொடர்பாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள ஆப்கானிஸ்தான் துணை அதிபர் சலேஹ், பஜ்ஷீர் மாகாணத்தில் வசிக்கும் ஆதில் என்பவர், ஹக்கானி பயங்கரவாத குழுவின் உறுப்பினரான சனவுல்லாவால் நியமிக்கப்பட்டார் என்று தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு அச்சுறுத்தலும், பாதுகாப்பு ரீதியான அழுத்தமும் கொடுக்கக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தன்னை நியமித்ததாக பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபரான ஆதில் ஒப்புக்கொண்டதாக சலே கூறினார்.
மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக ஆதில் காணவில்லை என்றும் அவர் "ஆய்வுக்காக" வெளிநாடு சென்றுள்ளார் என்றும் வதந்தி பரவியது.
தாக்குதலை நடத்தியவர்களுக்குப் பல அடையாளங்கள் உள்ளன, ஏனெனில் அவர்கள் சில சமயங்களில் தங்களை ஹிஸ்புத் தஹ்ரிர் பயங்கரவாத அமைப்பு, தலிபான் மற்றும் இஸ்லாமிய அமைப்புடன் (ஐ.எஸ்.) இணைத்துக்கொள்கிறார்கள். கோஸ்ட் மாகாணத்தில் உள்ள ஹக்கானி பயங்கரவாத அமைப்பிடமிருந்து தாக்குதலுக்கான ஆயுதங்களை பெற்றதாக ஆதில் ஒப்புக்கொண்டார் என்று சலேஹ் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்றபோதிலும், ஆப்கானிஸ்தான் அரசாங்கம் இந்தத் தாக்குதலுக்கு தலிபான்களை குற்றம் சாட்டியுள்ளது. பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 22 பேர் பலியாகினர்.
மேலும் 40 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் தாங்கள் ஈடுபடவில்லை என்று தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.