ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களால் அங்கு அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டு தலைநகர் காபூலில் இன்று மூன்று இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.
கல்லூரி மாணவர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து முதல் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் அந்தப் பகுதியில் இருந்த கடை உரிமையாளர் ஒருவர் பலியானதாகவும், 17 பேர் காயமடைந்தாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நுஸ்ரத் ரஹிமி தெரிவித்துள்ளார்.
மேலும், அதேப் பகுதியை சுற்றி தொடர்ந்து இரண்டு இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.