வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் இரண்டு நாள் பயணமாக ஈரான் நாட்டுக்குச் சென்றுள்ளார். இன்று (டிச23) அவர் அந்நாட்டின் பிரதமர் ஹசன் ருஹானியை சந்தித்துப் பேசினார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
முன்னதாக அவர் நேற்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர முகமது ஜாவீத் செரீஃபை சந்தித்துப் பேசினார். மேலும், அந்நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் அட்மிரல் அலி ஸம்ஹானியையும் அவர் சந்தித்தார்.
இந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு நாளை (டிச.24) ஜெய்சங்கர் ஓமன் செல்கிறார். அங்கு அந்நாட்டின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேச உள்ளார். ஈரானின் 'சாபர்ஹர் துறைமுகம்' குறித்து முக்கியமாகப் பேசப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஜெய்சங்கர், டிச.22 ஈரான் பயணம்