இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சவுதி அரேபியா மன்னர் முகமது பின் சல்மானை அந்நாட்டிற்கு சென்று சந்தித்ததாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சவுதி அரேபியாவின் நீயோம் நகரில் நடைபெற்ற இச்சந்திப்பில் இஸ்ரேல் உளவுத்துறையான மொசாட் அமைப்பின் தலைவர் யோசி கோஹன் உடன் இருந்ததாக கூறப்படுகிறது.
அதேவேளை இந்த தகவலை இஸ்ரேல் நாட்டின் பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தவில்லை. கடந்த ஒரு மாத காலத்தில் வளைகுடா நாடுகளுடனா உறவை இஸ்ரேல் சீர் செய்து வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் நாட்டுடன் நல்லுறவு ஒப்பந்தத்தை அண்மையில் மேற்கொண்டுள்ள இஸ்ரேல் பிராந்தியத்தின் முக்கிய நாடான சவுதி அரேபியா உடனும் ராஜரீக உறவு மேற்கொள்ள தீவிர முயற்சி செய்துவருகிறது.
இதன் பின்னணியிலேயே இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.