ETV Bharat / international

இஸ்ரேல் பிரதமருக்கு கரோனா இல்லை! - israel corona updates

ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவிற்கும், அவரது குடும்பத்திற்கும் கரோனா பெருந்தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெஞ்சமின் நெதன்யாஹு
பெஞ்சமின் நெதன்யாஹு
author img

By

Published : Mar 31, 2020, 8:38 AM IST

கரோனா வைரஸ் பெருந்தொற்று சீனாவில் தொடங்கி உலகம் முழுவதையும் பதம் பார்த்துவருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான இஸ்ரேலிலும் வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களுக்கு காலவரையற்ற விடுமுறை, வணிக வளாகங்கள், திரையரங்குகள், ஹோட்டல்களை மூட பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ உத்தரவிட்டார்.

இந்நிலையில், அந்நாட்டு பிரமதரின் உதவியாளர்களில் ஒருவருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 70 வயதான இஸ்ரேல் பிரதமர் நேட்டன்யாஹூ, தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார். அவருக்கும், அவரது குடும்பத்திற்கு கரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு இருப்பது குறித்து பரிசோதனை செய்யப்பட்டது.

  • PM Netanyahu's, his family's and staff's #coronavirus tests all came back negative. However, he will remain quarantined until further instructions are issued by the ministry of health.

    — Ofir Gendelman (@ofirgendelman) March 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதுகுறித்து அந்நாட்டு செய்தி தொடர்பாளர், ஓஃபிர் கெண்டெல்மேன் ட்விட்டர் பதிவில், “ பிரதமர் நேட்டன்யாஹூ மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எடுக்கப்பட்ட கரோனா பெருந்தொற்று உறுதி சோதனையில், அவர்களுக்கு ’கரோனா பாதிப்பில்லை’ என தெரியவந்தது. இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தலினாலும் நேட்டன்யாஹு தனிமைப்படுத்தப்படுவார்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: இளவரசர் சார்லஸின் நிலைமை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.