ETV Bharat / international

ட்ரம்ப்புடன் மோதும் மத்தியக் கிழக்கு நாடுகளின் தலைவர்கள்

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அபுதாபி இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் அடுத்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

2021 Nobel Peace Prize
2021 Nobel Peace Prize
author img

By

Published : Nov 25, 2020, 5:33 PM IST

அமைதிக்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. முதன்முதலில் 1901ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஹென்றி டுனான்ட் என்பவருக்கு, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு அவர் ஆற்றிய சேவையை கவுரவிக்கும் விதமாக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து மார்ட்டின் லூதர் கிங், அன்னை தெரசா, மலாலா உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகளுக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அபுதாபி இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் அடுத்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

தங்கள் நாடுகளுக்கு இடையே ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதில் பங்களித்ததற்காக இருவரும் அமைதிக்கான நோபர் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை இஸ்ரேல் பிரதமர் அலுவலகமும் உறுதி செய்துள்ளது.

முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார். மத்தியக் கிழக்கு நாடுகளில் அமைதியை ஏற்படுத்த ட்ரம்ப் ஆற்றிய பங்கிற்காக அவர் இவ்விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

பரிந்துரைகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் இறுதி முடிவு அறிவிக்கப்படும்.

இதையும் படிங்க: அதிபர் மாளிகை தகவல்கள் ஜோ பைடனுக்கு பரிமாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.