இஸ்ரேலில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் பிரதமர் நெதன்யாகு தலைமையிலான லிக்குட் கட்சி, முன்னாள் ராணுவ தளபதி பென்னி கான்ட்ஸ் தலைமையிலான ப்ளூ அண்ட் வைட் உள்ளிட்ட எந்தக் கட்சியாலும் பெரும்பான்மை பெறத் தவறியதால் அங்கு மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, செப்டம்பர் 17ஆம் தேதி இஸ்ரேலில் இரண்டாவது முறையாக பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதிலும், எந்தக் கட்யினாலும் பெரும்பான்மை இலக்கை எட்டமுடியவில்லை.
சிக்கலான இஸ்ரேல் அரசில் களத்தில் கூட்டணி ஆட்சியும் அமையாமல் இழுபறி நீடித்துவந்தது. இந்நிலையில் ஆட்சி அமைப்பதற்கான கால அவசாகம் இன்றோடு நிறைவடைந்ததை அடுத்து, மீண்டும் அடுத்து ஆண்டு மார்ச் மாதம் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் அவிக்டோர் லிபர்மேன், நாட்டின் நலனை கருத்தில்கொள்ளாமல் லிக்குட் கட்சியும், ப்ளூ அண்ட் வைட் கட்சியும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க மறுத்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.
செப்டம்பர் தேர்தலைத் தொடர்ந்து ஆளும் லக்குட் கட்சி 32 தொகுதிகளையும், எதிர்க்கட்சியான ப்ளூ அண்ட் வைட் 33 தொகுதிகளையும் கைப்பற்றியிருந்தது. 120 இருக்கைகள் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் 61 இருக்கைகளை வென்றால் ஆட்சி அமைக்கலாம். இதனிடையே, கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இறங்கிய பிரதமர் நெதன்யாகு, முக்கிய எதிர்க்கட்சியான ப்ளூ அண்ட் வைட் கட்சியோடு கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கு ப்ளூ அண்ட் வைட் கட்சி மறுப்பு தெரிவித்தது.
இதையும் படிங்க : இஸ்ரேல் பிரதமர் அந்தர் பல்டி : கூட்டணியமைக்க எதிர்க்கட்சிக்கு அழைப்பு
பிரதமர் நெதன்யாகு மீது பல்வேறு ஊழல், மோசடி வழங்குகள் பதியப்பட்டுள்ளதால், அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் அவருக்கு விஷப் பரிச்சையாக அமையும்.