லிபியாவில் நீண்ட நாட்களாக பதவி வகித்து வந்த அதிபர் கடாபியின் ஆட்சி 2011 ஆம் ஆண்டு மக்களின் கிளர்ச்சியால் கவிழ்க்கப்பட்டது. அது முதற்கொண்டு ராணுவக் குழுகளிடையே அதிகார மோதல்கள் நடைபெற்று வருகிறது. இந்தியா அமெரிக்கா போன்ற பல நாடுகளும் அந்நாட்டில் அமைதி பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றன. ஐ.நாவும் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
இந்நிலையில், லிபியாவின் தெற்கு பகுதியிலுள்ள செபா எனும் நகரில் கலிஃபா ஹஃப்தார் கிளர்ச்சியாளர்களின் முகாமை குறிவைத்து ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் சரமாரி தாக்குதல் நடத்தினர். இதில் ஹஃப்தார் படையை சேர்ந்த 9 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.