ஈராக்கில் கடந்த ஒருமாத்திற்கும் மேலாக அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிகரித்துவரும் வேலையின்மை, பொருளாதார சிக்கல், ஊழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வீதிகளில் இறங்கி போராடிவருகின்றனர்.
இந்த போராட்டத்தின் தீவிரத்தன்மையை ஒடுக்க அரசு காவல்துறையை களமிறக்கிய நிலையில், காவல்துறையின் ஒடுக்குமுறையில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் நடைபெற்ற கலவரத்தின் போது 50 பேருக்கும் மேல் கொல்லப்பட்டதையடுத்து அந்நாட்டு பிரதமர் அடேல் அப்துல் மஹ்திக்கு நெருக்கடி முற்றியது. இந்நிலையில், கிளர்ச்சியாளர்கள் நெருக்கடிக்கு அடிபணிந்து பதவி விலகுவதாக அந்நாட்டு பிரமதர் அடேல் அப்துல் மஹ்தி அறிவித்துள்ளார். கடந்தவருடம் அக்டோபர் மாதம் ஈராக் பிரதமராக அப்துல் மஹ்தி நியமிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: ட்ரம்ப் ஆப்கானிஸ்தானுக்கு ரகசியப் பயணம்...