ஈராக்கில் பெருகிவரும் வேலையின்மை, ஊழல், தவறான நிதி மேலாண்மை உள்ளிட்ட பிரச்னைகளைக் காரணம் காட்டி, அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த ஆறு நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கலவரங்களில் முடியும் இந்த போராட்டங்களில் இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஈராக் மக்கள் பலனடையும் வகையில் அந்நாட்டு பிரதமர் அப்துல் மஹ்தி பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புகள் மூலம் பல்வேறு தரப்பினருக்கு வேலைவாய்ப்புகள், நிலங்களைப் பகிர்ந்தளித்தல், ஏழைக் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் என ஈராக் பிரதமர் அப்துல் மஹ்தி உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: Iraq Protests: அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் தாக்குதல்