ETV Bharat / international

இந்தியப் பெருங்கடலில் கடற்படை தளம் அமைக்கும் ஈரான் - ஓமன் கடல் இந்தியப் பெருங்கடல்

தெஹ்ரான்: இந்தியப் பெருங்கடல் பகுதியில் வரும் 2021ஆம் ஆண்டுக்குள் நிரந்தர கடற்படை தளத்தை அமைக்க ஈரான் ராணுவம் திட்டமிட்டுள்ளது.

Iran
Iran
author img

By

Published : Jun 23, 2020, 3:51 PM IST

Updated : Jun 24, 2020, 3:28 AM IST

இந்தியப் பெருங்கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் விதமாக ஈரான் நாட்டு ராணுவம் கடற்படைத் தளம் ஒன்றை அமைக்கவுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் ராணுவத்தின் முக்கிய அங்கமான ஐ.ஆர்.ஜி.சி. என்ற பிரிவை அந்நாட்டின் மதத்தலைவரான அயதுல்லா காமேனி தலைமை வகிக்கிறார்.

இந்த புதிய கடற்படை தளம் அமைக்கும் பணியில் ஐ.ஆர்.ஜி.சி ஈடுபட வேண்டும் என மதத்தலைவர் அயதுல்லா காமேனி உத்தரவிட்டுள்ளார். இதை ஐ.ஆர்.ஜி.சியின் கடற்படைத் தளபதி அலிரேசா தன்ங்சிரி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ஈரான் கடற்பயணிகளைத் துன்புறுத்தும் விதமாக பல நடவடிக்கைகளை கொள்ளையர்கள், வெளிநாட்டு கப்பல்கள் அத்துமீறல்களை நடத்திவருகின்றனர். தற்போது ஓமன் கடற்பகுதியில் பலமான கடற்படையை கொண்டுள்ள ஈரான், இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் தனது வலிமையை நிலைநிறுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த கடற்படை தளம் அமைக்கப்படும் என ஈரான் தளபதி அலிரேசா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கனடவாசிகளை விடுவியுங்கள் : சீனாவை வலியுறுத்தும் கனட பிரதமர்

Last Updated : Jun 24, 2020, 3:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.