உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்புகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் கரோனா வைரசை எதிர்கொள்ளும் தடுப்பூசி பரிசோதனையை பல நாடுகளும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
இதுவரை ஈரானில் கரோனா தொற்றால் மூன்று லட்சத்து 86 ஆயிரத்து 658 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 22 ஆயிரத்து 293 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் ரஷ்யாவில் 10 லட்சத்து 25 ஆயிரத்து 505 பேர் பாதிக்கப்பட்டும், 17 ஆயிரத்து 820 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக கரோனா தடுப்பூசி பரிசோதனையை ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்கோவுக்கான ஈரான் தூதர் காசிம் ஜலாலி, ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ஆகியோரிடையே நடந்த காணொலி சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தி நியூ டைமண்ட் கப்பல் தீ விபத்து - காணொலி வெளியீடு