ETV Bharat / international

நிலத்தடியில் அணுசக்தி நிலையத்தை கட்டமைக்கும் ஈரான்! - tamil latest news

ஈரான் அரசு போர்டோவில் நிலத்துக்கு அடியில், அணசக்தி நிலையத்தை கட்டிவருவதாக தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு அதுதொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.

underground nuclear plant in Iran
நிலத்தடியில் அணுசக்தி நிலையத்தை கட்டமைக்கும் ஈரான்
author img

By

Published : Dec 18, 2020, 6:19 PM IST

துபாய்: அமெரிக்கா அணு சக்தி திட்டம் தொடர்பாக ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் பதட்டம் நிலவிவரும் சூழ்நிலையில், ஈரான் போர்டோவில் நிலத்துக்கடியில் அணுசக்தி நிலையத்துக்கான ஒரு கட்டுமானத்தை மேற்கொண்டுவருவதாக தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், அதுதொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.

போர்டோவில் புதிதாக கட்டுமானம் மேற்கொண்டுவருவதாக ஈரான் அரசு பொதுவெளியில் எங்கும் கூறவில்லை. ஆனால், இந்தப்பகுதியில் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு மாற்றத்தையும் கவனமாக கவனிக்கவேண்டும் என ஈரானை அரசியலை தொடர்ச்சியாக கவனித்துவரும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

போர்டோ பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டுமானத்தின் வேலைகள் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியுள்ளது. போர்டோவில் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டுமானம் வான்வழித் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் வகையில் மலைகளுக்குள் அமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஈரான் இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து டிராம்ப் கடந்த 2018ஆம் ஆண்டு ஒரு தலைபட்சமாக வெளியேறினார். பொருளாதார தடைகளை நீக்குவதற்கு யுரேனிய செறிவூட்டலை மட்டுப்படுத்த ஈரான் அரசு ஒப்புக்கொண்டது. ஆனால், பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டம், பிராந்திய அரசியல் உள்ளிட்டவற்றைச் சுட்டிக்காட்டி ஒப்பந்தத்தில் இருந்து டிரம்ப் வெளியேறினார்.

பொருளாதார தடைகளை அமெரிக்கா வலுப்படுத்திக்கொண்ட செல்ல, ஈரான் படிப்படியாக ஒப்பந்தங்களில் வரம்புகளை கைவிட்டது. இதனால், இந்தாண்டின் தொடக்கத்தில் இருநாடுகளுக்கு இடையில் போர் ஏற்படும் சூழல் நிலவியது.

2015 அணுசக்தி திட்டத்தின்படி, யுரேனிய செறிவூட்டலை நிறுத்த ஈரான் ஒத்துக்கொண்டதோடு, போர்டோவில் உள்ள அணு சக்தி நிலையத்தை அணு இயற்பியல் மற்றும் தொழில்நுட்ப மையமாக மாற்றியது. இந்த ஒப்பந்தம் தோல்வியை அடைந்தபோது, ஈரான் அரசு யுரேனிய செறிவூட்டலை மீண்டும் தொடர்ந்தது.

யுரேனியத்தை 3.76 விழுக்காடு வரையில் மட்டுமே செறிவூட்டவேண்டும் என்ற ஒப்பந்தத்தை மீறி ஈரான் தற்போது 4.5 விழுக்காடுவரை செறிவூட்டி வருகிறது. தெக்ரானிலுள்ள யுரேனியத்தை 20 விழுக்காடுவரை செறிவூட்டும் மசோதவை ஈரான் நாடாளுமன்றம் நிறேவற்றியுள்ளது. தற்போது, இரண்டு அணு ஆயுதங்களுக்குத் தேவையான யுரேனியத்தை ஈரான் அரசு கொண்டுள்ளதாக வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: 'டொனால்ட் ட்ரம்ப் ஒரு கொலையாளி, பயங்கரவாதி' - ஈரான் அதிபர் ஹசான் ரவுஹானி சாடல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.