ஏமனில் கடந்த ஐந்து வருடங்களாக அந்நாட்டு அரசுக்கும், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
2014ஆம் ஆண்டு, ஏமன் தலைநகர் சனாவைக் கைப்பற்றும் போது நூற்றுக்கணக்கானோர்களை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சிறைபிடித்தனர்.
இந்நிலையில் அப்போது சிறைப்பிடிக்கப்பட்ட 290 போர்க் கைதிகளை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இன்று விடுவித்தனர்.
சிறைக்கு வெளியே மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்த குடும்பத்தினர் அவர்களைக் கட்டித் தழுவி கண்ணீர் மல்க வரவேற்றனர்.
இதையும் படிங்க: ஆயிரக்கணக்கான சவுதி படையினரை சிறைப்பிடித்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் !