2015ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் ஆதரவு ஹவுதி என்னும் கிளர்ச்சியாளர்களும், சவுதி - ஏமன் நேசப்படையும் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் விளைவாக லட்சக்கணக்கானோர் அத்தியாவசியத் தேவைகள் ஏதும் கிடைக்காமல் பெரும் இன்னல்களை சந்தித்துவருகின்றனர்.
இந்தப் போரில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். தலைநகர் சனா உள்பட வடக்கு ஏமன் பகுதியை ஹவுதி படையினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இந்நிலையில், தலைநகர் ரியாத்திலிருந்து 860 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சுவுதி அரேபியா- ஏமன் எல்லைப்பகுதியான, நஜ்ரன் விமான நிலையத்தை ஹவுதி படையினர் குவாசெஃப் 2 கே ( Qasef-2K) என பெயரிப்பட்ட ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அமெரிக்கா ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவிவருவதன் காரணமாகவே, இத்தகைய தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக சர்வதேச வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.