ஆப்கானிஸ்தானின் கந்தகார் மாகாணத்தில் அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கானின் அலுவலகம் அமைந்துள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு அந்த அலுவலகத்துக்கு எதிரே காதை செவிடாக்கும் சத்தத்தோடு குண்டு வெடித்தது. இதில், ஒரு குழந்தை, பெண் மற்றும் முதியவர் ஒருவர் என மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், ஏழு பேர் காயமடைந்ததாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.
இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. வரும் செப்டம்பர் 28ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடந்த ஒரு மாதமாக இதுபோன்ற வெடிகுண்டுத்தாக்குதல் சம்பவங்களை தலிபான் பயங்கரவாதிகள் அரங்கேற்றி வருகின்றன.
இதுவும் படிங்க: ஆப்கானில் அரசுப்படை-தலிபான்கள் தாக்குதல்: 50 அப்பாவிகள் உயிரிழப்பு