துருக்கி நாட்டின் கடற்கரையோரமாக அமைந்திருக்கும் மேற்கு இஸ்மிர் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.6ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் இஸ்மிர் நகரத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் உருக்குலைந்து சரிந்தன.
இதுதவிர ஆயிரக்கணக்கான கட்டடங்கள் பகுதியளவிலும், 40க்கும் மேற்பட்ட கட்டடங்கள் முற்றிலும் இடிந்து சேதடைந்தன.
இந்த நிலநடுக்கத்தின்போது ஏற்பட்ட கட்டட இடர்பாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73ஆக உயர்ந்துள்ளது என்றும் 961 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அந்நாட்டின் பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையம் (AFAD) தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:துருக்கி, கிரீஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு