பைசர் நிறுவனம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்திற்கு சில வாரங்களுக்கு முன் பிரிட்டன் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், இரண்டாவது நாடாக பஹ்ரைனும் தற்போது கரோனா தடுப்பு மருந்தின் அவசரப் பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
தற்போதுவரை மூன்றாம் மருத்துவச் சோதனை குறித்து வெளியான தகவல்களின் அடிப்படையிலேயே இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தடுப்பு மருந்திற்கு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டாலும் தடுப்பு மருந்தை மக்களுக்கு அளிக்கும் பணி எப்போது தொடங்கப்படும் போன்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.
பஹ்ரைனுடன் எந்த மாதிரியான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது, எவ்வளவு டோஸ்கள் என்ன காலகட்டத்தில் வழங்கப்படும் போன்ற தகவல்களை வெளியிட பைசர் நிறுவனம் வெளியிட மறுத்துவிட்டது. இருப்பினும், தடுப்பு மருந்து விநியோகம், சேமிப்பு உள்ளிட்டவை குறித்த விரிவான திட்டத்தை வகுத்துள்ளதாக ஃபைசர் தெரிவித்துள்ளது.
ஃபைசர் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்தை மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். ஆனால், பஹ்ரைன் நாட்டில் சாதாரணமாகவே வெப்பநிலை 40 செல்சியஸை தாண்டும். தடுப்பு மருந்தை அந்தவொரு வெப்பநிலையில் வைத்திப்பதே முக்கியச் சவாலாக இருக்கும்.
துபாய் அருகே உள்ள குட்டி தீவு நாடான பஹ்ரைன் ஏற்கனவே, சீனா உருவாக்கியுள்ள சினோபார்ம் என்ற தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
16 லட்சம் மக்கள் தொகையை கொண்ட பஹ்ரைனில் இதுவரை 87 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் 341 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: '100 நாள்களுக்கு மட்டும் மாஸ்க் அணியுங்கள்' - பைடன்