ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பை குறிவைத்து தொடர் தாக்குதல் நடைபெற்று வருகின்றது. படகாஷான், பக்டியா, காஸ்னி, லோகர், உருஸ்கான், ஹெல்மான்ட் ஆகிய மாகாணங்களின் மத்திய பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த 24 மணி நேரமாக நடைபெற்று வரும் இந்த தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதல் மூலம் பல்வேறு பகுதியில் உள்ள சோதனைச்சாவடியை அரசுப்படை மீண்டும் கைப்பற்றியுள்ளது. எனினும், இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.