ETV Bharat / international

8 லட்சம் இந்தியர்களை வெளியேற்றும் குவைத் அரசு!

குவைத்: குடியேற்ற ஒதுக்கீடு மசோதாவுக்கு குவைத் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதால், 8 லட்சம் இந்தியர்கள் அந்நாட்டிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Kuwait  Kuwait Expat quota bill  Indians  குவைத்  குவைத் வெளிநாட்டினர் மசோதா  இந்தியர்கள் குவைத்திலிருந்து வெளியேற்ற வாய்ப்பு  குவைத் இந்திய தொழிலாளர் பிரச்னை
8 லட்சம் இந்தியர்களை வெளியேற்றும் குவைத் அரசு
author img

By

Published : Jul 6, 2020, 3:31 PM IST

குவைத் நாட்டிலுள்ள மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். தற்போது கரோனா பெருந்தொற்று, கச்சா எண்ணெயின் வீழ்ச்சி உள்ளிட்டவை வளைகுடா நாடுகளின் பொருளாதாரத்தை ஆட்டம் காணவைத்துள்ளன. கடந்த மாதத்தில் குவைத்தின் பிரதமர் ஷேக் சபாக் அல் காலித் அல் சபாக், குவைத்திலுள்ள வெளிநாட்டினர் எண்ணிக்கையை 70 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காடாகக் குறைக்க வேண்டும் என அறிவித்ததாகக் கூறப்படுகிறது.

இச்சூழலில், குவைத் நாடாளுமன்றம் குடியேற்ற ஒதுக்கீடு வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவானது இந்தியாவைச் சேர்ந்தவர்கள் குவைத் நாட்டு மக்கள்தொகையில் 15 விழுக்காடுக்கு மேல் இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்துகிறது. இந்த மசோதாவுக்கு அந்நாட்டின் நாடாளுமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளதால், சுமார் 8 லட்சம் இந்தியர்கள் குவைத்திலிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

குவைத்திலுள்ள வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களில் இந்தியர்களே அதிகம். இந்தியாவைச் சேர்ந்த சுமார் 10 லட்சம் பேர் அங்கு பணிபுரிந்துவருகின்றனர். மொத்தம் 43 லட்சம் மக்கள்தொகையில் 30 லட்சம் பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.

இதையும் படிங்க: ஊழல் வழக்குகளின் மைய புள்ளியாக திகழும் இஸ்ரேல் நாட்டு பிரதமரின் மகன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.