ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவந்து அங்கு அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக அமெரிக்கா- தாலிபான் பிரதிநிதிகளிடையே அவ்வப்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
எனினும், தாலிபான் பயங்கரவாத அமைப்பு பல்வேறு தாக்குதலை தொடர்ந்து நடத்திவருகின்றது. அந்த வகையில், ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள பாகிராம் விமான தளம் அருகே அமெரிக்க ராணுவ வாகனத்தை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணிக்கு நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் பலியாகியுள்ளதாக பாகிராம் மாவட்ட ஆளுநர் அப்துல் ஷாகூர் குடோசி தெரிவித்துள்ளார்.