ETV Bharat / international

சிரியாவில் துருக்கிப் படையினர் மீது தாக்குதல்; 29 பேர் உயிரிழப்பு

டமாஸ்கஸ்: சிரியாவில் முகாமிட்டுள்ள துருக்கிப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 29க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

turkey
turkey
author img

By

Published : Feb 28, 2020, 11:47 AM IST

சிரியாவை ஒட்டியுள்ள துருக்கியின் எல்லைப்பகுதியில் கடந்த மூன்று மாதமாக தீவிரமான போர் நடைபெற்று வருகிறது. சிரியாவில் நிலவும் உள்நாட்டுக் குழப்பம் மற்றும் போர் சூழலால் பல்வேறு அகதிகள் இந்த எல்லைப்பிரிவை ஒட்டியுள்ளனர். இந்தச் சிக்கலுக்கு காரணமான சிரிய அரசுக்கு எதிராக அண்டை நாடான துருக்கி எல்லைப்பகுதியில் தன்நாட்டு ராணுவத்தை குவித்து தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

துருக்கியின் இந்த செயலுக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பை காட்டிவருகிறது.

இந்நிலையில், தற்போது எல்லைப்பகுதியில் உள்ள துருக்கி ராணுவத்தின் மீதான தாக்குதலில் சுமார் 29க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளதா, அல்லது ரஷ்யாவின் தூண்டுதலின் பேரில் சிரியா நடத்தியுள்ளதா என்ற சந்தேகம் கடுமையாக எழுந்துள்ளது.

இத்தாக்குதலின் தொடர்ச்சியாக, எல்லைப்பகுதியில் தங்கியுள்ள 36 லட்சம் சிரிய அகதிகள் ஐரோப்பாவுக்குள் நுழைவதற்கு, துருக்கி தன்நாட்டு எல்லையைத் திறந்துவிடப்போவதாக தெரிவித்துள்ளது. இந்நிகழ்வு இந்தப் பிராந்திய அரசியலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: துணை அதிபருக்கே கொரோனா; பரிதவிக்கும் ஈரான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.