கத்தோலிக்க நாடான போலாந்தில் கடுமையான கருக்கலைப்புச் சட்டம் அமலில் உள்ளது. இச்சட்டத்தின்படி, பாலியல் வன்புணர்வுக்குள்ளான பெண்களும், சட்டவிரோத திருமணத்தைச் செய்துகொள்ளும் பெண்களும் மட்டுமே கருக்கலைப்புச் செய்துகொள்ளலாம். பெண்ணின் உடல்நிலை பாதிக்கப்படும்பட்சத்திலும் கருக்கலைப்பு அனுமதிக்கப்படுகிறது.
ஆனால், கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி குறைபாடாக இருந்தாலும் கருக்கலைப்பு அனுமதிக்கப்படுவதில்லை. இச்சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெண் செயற்பாட்டாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்த தீர்ப்பு கடந்த 21ஆம் தேதி வெளியானது. தீர்ப்பு வெளியானதில் இருந்தே தெருக்களில் இறங்கி கடுமையான போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டுவருகின்றனர். கரோனா வைரஸ் நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையிலும், தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
இது குறித்து பெண் செயற்பாட்டாளர் ஒருவர் கூறுகையில், "இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். புதன்கிழமை கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளோம். வார்சா நகரில் பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
2019ஆம் ஆண்டு ஆயிரத்து 110 கருக்கலைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.