சர்வதேச நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பரவல் நிலவரம் குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை தற்போது முடிந்துள்ளது.
இந்த காலகட்டத்தில், மக்களின் போக்குவரத்து மற்றும் தொடர்பு அதிகம் காணப்பட்டதால், இனி வரும் நாள்களில் கோவிட் தொற்று அதிகம் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, தினசரி பாதிப்பு எண்ணிக்கையை எதிர்கொண்டு மருத்துவமனை போன்ற சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்த தயாராக இருக்க வேண்டும் என அறிக்கையில் எச்சரித்துள்ளது.
2021ஆம் ஆண்டு நிலவரப்படி உலகம் முழுவதும் சுமார் 860 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. உலக அளவில் 57 விழுக்காடு மக்கள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியும், 47 விழுக்காடு மக்கள் முழுமையாகவும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
அதேவேளை அதிக வளம் மிக்க நாடுகளில் 666 விழுக்காட்டினர் தடுப்பூசி செலுத்தியுள்ள நிலையில், குறைந்த வருவாய் வரும் நாடுகளில் வெறும் 9 விழுக்காட்டினர் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: 17 வயது இந்தியரை பிடித்து வைத்துக்கொண்ட சீன ராணுவம்