உக்ரைன் தலைநகர் கியிவ் அருகே சர்னோபாயில் அணுசக்தி நிலையம் உள்ளது. இதனைச் சுற்றியுள்ள காடுகள் கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.
இதனால் கியிவ் நகரமே புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் எனவும், சன்னல்களை மூடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மின்னல் வேகத்தில் பரவிவரும் காட்டுத் தீயை அணைக்க சுமார் ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
காட்டை ஒட்டியுள்ள பகுதியில் வசித்து வரும் மக்கள் குப்பைகளை எரிக்கும்போது எதிர்பாராத விதமாக தீ பரவியதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிகள் : கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து பணிக்கு திரும்பிய போரிஸ் ஜான்சன்