பிரிட்டனை மிரட்டும் புது கரோனா
பிரிட்டன் நாட்டில் கோவிட்-19 பாதிப்பு புதிய கட்டத்தை எட்டியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இரண்டாம் அலை பாதிப்பு தீவிரமடைந்துவரும் நிலையில், பிரிட்டன் நாட்டின் சில பகுதிகளில் அதன் வேகம் பண்மடங்கு அதிகரித்தது. இதையடுத்து, அந்நாட்டின் பெருந்தொற்று வல்லுநர்கள் நடத்திய ஆய்வில், கோவிட்-19 வைரஸ் புதுவித பரிணாமம் பெற்று உருமாறியுள்ளது கண்டறியப்பட்டது.
இந்த உருமாறிய கரோனாவால் அந்நாட்டில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்நாட்டில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள் மிகுந்த கட்டுப்பாடுடனே நடைபெறவுள்ளது.
திணறும் பிரிட்டன்
கடந்த ஒரு வாரமாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பல்வேறு கட்டுபாடுகள் விதித்துவரும் நிலையிலும் அங்கு நாளுக்கு நாள் நோய் தீவிரம் கூடிக்கொண்டே போகிறது. இதுவரை இல்லாத அளவில் ஒரேநாளில் 39 ஆயிரத்து 237 கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் ஒரேநாளில் 744 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணாக அங்குள்ள சுகாதாரத் துறை அலுவலர்கள், மருத்துவர்கள் திணறிவருகின்றனர்.
இதையும் படிங்க: அலிபாபா நிறுவனத்திற்கு எதிராக சாட்டையைச் சுழற்றும் சீன அரசு!