லண்டன்: உலகெங்கிலும் உள்ள பொது சுகாதார அலுவலர்கள், உலகளவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமானவர்களை பலிகொண்ட தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர். இதற்காக பில்லியன் கணக்கான மக்களுக்கு விரைவாக தடுப்பூசி வழங்கும் பணிக்குத் தயாராகிவருகின்றனர்.
இதற்கிடையில் ஐரோப்பிய நாடுகள் சுமார் 1.74 மில்லியன் கரோனா பாதிப்புகளுக்கு தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக லண்டனில் நாளுக்கு நாள் தொற்றின் தீவிரம் அதிகரித்துவருகிறது. இதனால் மக்கள் அனைவரும் தொடர்ந்து தேசிய சுகாதார அமைப்பைத் தொடர்புகொண்டு தடுப்பூசி தொடர்பான தகவல்களைக் கேட்டறிந்துவருகின்றனர்.
ஐரோப்பிய நாடுகள் நன்கு வளர்ந்த உள்கட்டமைப்பைக் கொண்டிருந்தாலும், அவை குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள் போன்றோருக்கு மட்டுமே தடுப்பூசி போடுவதற்கு உதவுகிறது. இங்கு தயாரிக்கும் தடுப்பூசிகள் அனைத்து மக்களுக்கும் செலுத்த ஏதுவாகவும் இல்லை. எனவே, ஏழு வெவ்வேறு தயாரிப்பாளர்களிடமிருந்து மில்லியன் கணக்கான தடுப்பூசிகளைப் பெறவுள்ளது.
ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகள் டிசம்பர் 6ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஐரோப்பிய மருத்துவமனைகளின் குழுவுக்கு வழங்கப்பட்டது. இந்தத் தடுப்பூசிகள் நோய்த்தொற்றினால் அதிக ஆபத்தில் இருப்பவர்களுக்கும், முதியவர்களுக்கும் அளிக்க பயன்படுத்தப்பட்டுவருகிறது. அதாவது சுமார் 40 விழுக்காடு மக்களின் பயன்பாட்டிற்காக இந்த மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் காப்பதே எங்கள் குறிக்கோள் எனத் தெரிவித்த சுகாதார அலுவலர்கள் இரண்டாம் உலகப்போரில் வின்ஸ்டன்ட் சர்ச்சில் பயன்படுத்திய வி-டே என்ற வார்த்தை அதாவது வெற்றிக்கான நாளுக்காக காத்திருப்பதாகக் கூறினர்.
முன்னதாக இரண்டாம் எலிசபெத் ராணி (94), அவரது 99 வயதான கணவர் இளவரசர் பிலிப் ஆகியோருக்குத் தடுப்பூசி போடப்படும் என்று வெளியான தகவல்களை பக்கிங்ஹாம் அரண்மனை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசிக்காக காத்திருக்கும் எலிசபெத் ராணி - காரணம் என்ன தெரியுமா?