பிரிட்டனில் ஒவ்வொரு ஆண்டும் அந்நாட்டு ராணி எலிசபெத்தின் பிறந்தநாள் (ஏப்ரல் 21ஆம் தேதி) பெரும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்நிலையில், தற்போது அந்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருவதால் தன் பிறந்தநாளையொட்டி நடக்கும் துப்பாக்கிச்சூடு மரியாதை நிகழ்ச்சியை ரத்து செய்வதாக ராணி எலிசபெத் அறிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய சூழலுக்கு இ்துபோன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது சரியாக இருக்காது என்றும் ராணி தெரிவித்துள்ளதாக டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மாறாக, இளவரசர் பிலிப்புடன் (கணவர்) விண்ட்சர் கோட்டையில் வசித்துவரும் ராணி எலிசபெத் தனது 94வது பிறந்தநாளை குடும்பத்துடன் தனிப்பட்ட முறையில் கொண்டாடவுள்ளார்.
இதனிடையே, பிரிட்டனில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் 'ட்ரூப்பிங் தி கலெர்' ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியை ஜூன் மாதம் நடத்தலாம் என்ற யோசனையும் கைவிடப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரை பிரிட்டனில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 769 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 14 ஆயிரத்து 607 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க : லாக் டவுன் இல்லாமல் ஹாங்காங் கரோனாவை சமாளித்தது எப்படி ?