ETV Bharat / international

கரோனா 2.0: பிரிட்டனில் மீண்டும் முழு ஊரடங்கு!

லண்டன்: பிரிட்டனில் உருமாறிய கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில், அங்கு மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன்
author img

By

Published : Jan 5, 2021, 4:15 PM IST

பிரிட்டனில் மரபியல் மாற்றமடைந்த உருமாறிய கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்நிலையில், பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக அங்கு மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து போரிஸ் ஜான்சன் கூறுகையில், "கடந்தாண்டு பெருந்தொற்றுப் பரவ தொடங்கியதிலிருந்தே, கரோனாவுக்கு எதிரான போரில் நாடு தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. பழைய வைரஸ் நோயைக் கட்டுப்படுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டுவருகிறோம். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆனால், தற்போது, உருமாறிய கரோனா வைரஸ் நோய் வந்துள்ளது.

புதிய வைரஸ் நோய் வேகமாகப் பரவிவருவது எங்களை விரக்தி கலந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்பு இருந்ததைவிட, கரோனா பரவ தொடங்கியதிலிருந்து மருத்துவமனைகள் பெரும் அழுத்தத்தில் உள்ளன. இங்கிலாந்தில் மட்டும் கடந்த வாரம், கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேருவோரின் எண்ணிக்கை மூன்றில் ஒரு மடங்கு அதாவது 27,000ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதத்தைவிட 40 விழுக்காடு அதிகமாகும்" என்றார்.

முன்னதாக, பிரிட்டனின் ஒரு அங்கமாக உள்ள ஸ்காட்லாந்தில் நேற்று மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஏற்கனவே, வேல்ஸ், வடக்கு ஐயர்லாந்து ஆகிய நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.