உலகளவில் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் தாக்கம் சீனா, தென் கொரியாவில் குறைந்துவரும் நிலையில், தற்போது ஐரோப்பிய நாடுகளில் அதன் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக இத்தாலியில் 631 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 168 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். அங்கு சுமார் ஒரு கோடி பேர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தற்போது இங்கிலாந்து நாட்டிலும் கொரோனா வேகமாகப் பரவிவருகிறது. இதுவரை 383 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சரையும் கொரோனா வைரஸ் விட்டுவைக்கவில்லை.
சுகாதாரத்துறை அமைச்சர் நாடின் டோரிஸ் தனக்கு கொரோனா வைரஸ் இருப்பதாகவும், எனவே தன்னை வீட்டில் தனிமைபடுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்துக்கொள்வதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பல்வேறு மக்களை பாதித்த கொரோனா வைரஸ், சுகாதாரத்துறை அமைச்சரையும் விட்டுவைக்காதது இங்கிலாந்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: ஆட்சியை தக்க வைக்க உதவும் மசோதா : ரஷ்ய அதிபர் ஒப்புதல்