பிரிட்டனில் 650 மக்களவைத் தொகுதிகளுக்கும் இன்று பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. முன்னாள் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி, ஜெரிமி கார்பின் தலைமையிலான தொழிலாளர்கள் கட்சி (Labours Party), ஜோ ஸ்வின்சன் தலைமையிலான லிபரெல் டெமாக்ரெட்ஸ் (Liberal Democrats), நிகோலஸ் ஸ்ட்ரூஜியன் தலைமையிலான எஸ்.என்.பி. (SNP) உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் களம்காண்கின்றன.
இந்தத் தேர்தலில் பிரெக்ஸிட் விவகாரம், சுகாதாரம், வீட்டுவசதி, பொருளாதாரம், பருவநிலை மாற்றம் ஆகியவகை முக்கியப் பிரச்னைகளாக பார்க்கப்படுகிறது.
பிரிட்டனில் பொதுத்தேர்தல் நடப்பதற்கான அவசியம் என்ன ?
பிரிட்டன் பொதுத்தேர்தல் 2022ஆம் ஆண்டு தான் நடந்திருக்க வேண்டும். ஆனால், சிறுபான்மை அரசு நடத்திவந்த முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனால், பிரெக்ஸிட் விவகாரத்தில் நாடாளுமன்ற ஒப்புதலை பெறமுடியாமல் போனதால் பெரும்பான்மையை அடையும் நோக்கில் அக்டோபர் மாதம் இந்த பொதுத்தேர்தலை அறிவித்தார்.
அது என்ன பிரெக்ஸிட் ? - இந்த இணைப்பை சொடுக்குங்கள்
கருத்து கணிப்புகள் என்ன சொல்கின்றன ?
பெரும்பாலான கருத்து கணிப்புகள் போரிஸ் ஜான்சன் வழிநடத்திவரும் கன்சவர்வேட்டிவ் கட்சி அதிகப்படியான தொகுதிகளை வெல்லும் எனத்தெரிக்கின்றன. ஆனால், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை கன்சர்வேட்டிவ் பெறாது என யூகௌப் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
ஒருவேளை கன்சர்வேட்டிவ் கட்சியால் பெரும்பான்மை பெறமுடியாமல் போனால், மற்ற சிறிய கட்சிகளின் உதவியுடன் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிருக்கும். இதுநடந்தால், பிரிக்ஸிட் ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படக்கூடும்.
இதையும் படிங்க : பிரிட்டன் தலையெழுத்தை தீர்மானிக்கும் தேர்தல்!