ETV Bharat / international

பொருளாதார மந்தநிலைக்குப் பின் கடும் சரிவை சந்தித்த பிரிட்டன் பொருளாதாரம் - பிரிட்டன் ஜிடிபி

லண்டன்: கோவிட்19 பரவல் காரணமாக 2008ஆம் ஆண்டு பொருளாதார மந்தநிலைக்குப் பின் கடும் பொருளாதார சரிவை பிரிட்டன் சந்தித்துள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது.

UK GDP
UK GDP
author img

By

Published : May 13, 2020, 7:17 PM IST

கடந்தாண்டு இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதலில் கண்டறியப்பட்ட கோவிட்-19 தொற்று, தற்போது 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் மார்ச் மாதம் முதல் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.

இந்நிலையில், 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி குறித்த தரவுகளை பிரிட்டன் நாட்டின் தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் வெளியிட்டுள்ளது. பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் இரண்டு விழுக்காடு வரை சுருங்கியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"கோவிட்-19 பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளும் மார்ச் மாதத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு சரிவை சந்தித்துள்ளன. நாட்டின் பொருளாதாரம் இரண்டு விழுக்காடு வரை சுருங்கியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச பொருளாதார மந்தநிலையின்போது, பிரிட்டன் கடுமையாக பாதித்தது. அதன்பின் பிரிட்டன் பொருளாதாரம் கண்டுள்ள மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியாக இது பார்க்கப்படுகிறது. மார்ச் மாதத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.8 விழுக்காடு வரை சுருங்கியுள்ளது.

பிரிட்டன் நாட்டின் சேவை துறை சரிவை சந்தித்ததால் 2019ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி சுழியத்திலிருந்தது குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19 பரவல் காரணமாக தகுந்த இடைவெளி கடைப்பிடித்துவருவதாலும் நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள சுகாதாரக் கட்டுப்பாடுகள் காரணமாகவும் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80 விழுக்காட்டைக் கொண்ட சேவை பிரிவு 1.9 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. உற்பத்தித் துறை 2.1 விழுக்காடும் கட்டுமான துறை 2.6 விழுக்காடும் வீழ்ச்சியடைந்துள்ளன.

முன்னதாக செவ்வாய்க்கிழமை பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக், அக்டோபர் மாதம் வரை ‘கரோனா வைரஸ் வேலை தக்கவைப்பு திட்டம்’ நீட்டிக்கப்படும் என்று அறிவித்தார், இத்திட்டத்தில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான 80 விழுக்காடு ஊதியத்தை அரசே அளித்துவிடும்.

தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வேலையைவிட்டு நீக்காமல் இருக்க இது உதவினாலும், தற்போது நான்கு மாதங்கள் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் அரசின் நிதி ஆதாராம் மோசமடையலாம் என்று சில பொருளாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கடன் தொகையை நிறுத்தி வைக்கக்கோரி 90% வாடிக்கையாளர்கள் விண்ணப்பம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.