ETV Bharat / international

ரூ.5,000 கோடி கடன்: சீன வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்த அம்பானிக்கு உத்தரவு

author img

By

Published : May 23, 2020, 4:48 PM IST

லண்டன்: சீன வங்கிகளிடம் வாங்கிய சுமார் 5,000 கோடி ரூபாய் கடனை 21 நாள்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும் என அனில் அம்பானிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Anil Ambani
Anil Ambani

ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தலைவரான அனில் அம்பானி நீண்ட நாள்களாகவே பெரும் நிதிச்சுமையில் சிக்கித்தவிக்கிறார். பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் தவித்துவரும் அனில் அம்பானி மீது பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சீனாவின் மூன்று வங்கிகளில் சுமார் 5,000 கோடி ரூபாய் கடன்பெற்று, அதைத் திரும்பச் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு அனில் அம்பானி மீது வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த லண்டன் நீதிமன்றம், அடுத்த 21 நாள்களுக்குள் கடன் தொகையை அனில் அம்பானி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி அனில் அம்பானி மேல் முறையீடு செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இந்திய வங்கிகளில் பெற்ற கடனைத் திரும்பச் செலுத்தாத காரணத்திற்காக அனில் அம்பானி கைது நடவடிக்கைக்கு ஆளான நிலையில், அவரது அண்ணனான முகேஷ் அம்பானி கடனைத் திரும்பச் செலுத்தி கைது நடவடிக்கையிலிருந்து காப்பாற்றினார். இந்நிலையில், அடுத்த 21 நாள்களில் அனில் அம்பானி கடனை எவ்வாறு திரும்பச் செலுத்துவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க: வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்: க்யூஆர் குறியீடு மூலம் தொடர்புகளை இணைக்கலாம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.