கரோனா தடுப்பூசியைக் கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளும் பல்வேறு நிறுவனங்களும் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஃபைசர் - பயோன் டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம் பலர் உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து கரோனா தடுப்பூசி அடுத்த வாரம் முதல் பிரிட்டனில் விற்பனைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.