ETV Bharat / international

கரோனா இறப்பு விகிதத்தை குறைக்கும் டெக்ஸாமெத்தசோன் மருந்து!

லண்டன்: டெக்ஸாமெத்தசோன் எனும் ஸ்டீராய்டு மருந்தைக் கொண்டு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்தலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

steroid dexamethasone
steroid dexamethasone
author img

By

Published : Jun 18, 2020, 5:11 AM IST

உலகையை மிரட்டிவரும் கரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்க அமெரிக்க, ஜெர்மன் உள்ளிட்ட முன்னணி நாடுகள் முனைப்போடு செயல்பட்டுவருகின்றனர். இச்சூழலில், மிகவும் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய டெக்ஸாமெத்தசோன் என்னும் ஸ்டீராய்டு மருந்தின் மூலம் கரோனா இறப்பு விகித்ததைக் குறைக்கலாம் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. இம்மருந்தை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்தால் அவர்கள் விரைவில் குணமடைவதாகவும், இதனால் இறப்பு விகிதம் குறைவதாகவும் பிரிட்டன் தேசியச் சுகாதாரச் சேவை நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் இதனைப் பயன்படுத்தி வென்டிலேட்டர் சிகிச்சை பெறுபவர்களையும் மீட்கலாம் என்பதால், கரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் பெருமளவு கட்டுப்படுத்தப்படுகிறது என்றும் தெரியவந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டவர்களில் 20 விழுக்காட்டினரும், வென்டிலேட்டர் சிகிச்சையில் இருப்பவர்களில் 35 விழுக்காட்டினரும் உயிரிழப்பிலிருந்து பாதுகாக்கப்படுவதாகவும் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. இதனை உலகச் சுகாதார அமைப்பு வரவேற்றுள்ளது.

இதனைக் கண்டுபிடித்த அறிவியல் ஆய்வாளர்கள் அனைவருக்கும் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். பிரிட்டன் மக்களுக்குப் பயன்படுத்த வேண்டிய இந்த மருந்தை வாங்கி, வெளிநாடுகளுக்கு அதிக விலையில் விற்கக்கூடிய மருந்து நிறுவனங்கள் விற்பனை செய்ய அந்நாட்டு அரசு தடைவித்துள்ளது. இந்தத் தடை உள்நாட்டில் மக்களுக்கு மருந்து தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகுக்கும் என்று அந்நாட்டு சுகாதாரத் துறை கூறியுள்ளது.

இதையும் படிங்க: நியூசிலாந்தில் மீண்டும் கரோனா பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.