பிரான்ஸின் டசால்டு நிறுவனத்திடம் இந்திய அரசு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது.
இந்த விமானங்கள் மே மாத இறுதியில் இந்தியாவுக்குக் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்திருந்த நிலையில், கரோனா பெருந்தொற்று காரணமாக 11 மாதங்கள் காலதாமதமாக இந்திய வரும் என சமீபத்தில் தகவல் வெளியாகின.
இந்நிலையில், ரஃபேல் விமானங்கள் காலதாமதம் இல்லாமல் இந்தியா வந்து சேரும் என இந்தியாவிற்கான பிரான்ஸ் தூதர் இமானுவேல் லெனன் உறுதி அளித்துள்ளார்.
இதுகுறித்து இமானுவேல் லெனன் பேசுகையில், "ஏப்ரல் மாத இறுதியில் இந்திய விமானப்படையிடம் ஒரு ரஃபேல் விமானம் ஒப்படைக்கப்பட்டது. முதல் நான்கு ரஃபேல் விமானங்களை விரைவில் இந்தியாவுக்குக் கொண்டு வருவது குறித்து, இந்திய விமானப்படையினருக்கு உதவி வருகிறோம். ஆகையால், விமானம் டெலிவரி செய்வதில் தாமதமாகும் எனச் சந்தேகம் வேண்டாம்" என்றார்.
2016ஆம் ஆண்டு பிரான்ஸ் பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி ரூ.58 ஆயிரம் கோடிக்கு 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க, பிரான்ஸ் அரசுடன் இந்தியா சார்பில் ஒப்பந்தமிட்டார்.
இந்த விமானங்கள் அதி நவீன தொழில்நுட்பத்துடன் இந்திய விமானப் படை தேவைக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : விமானம், ரயில் பயணங்களுக்கான வழிகாட்டுதல்கள்!