லண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தொண்டு நிகழ்ச்சியொன்றில் ஹாரி கலந்துகொண்டார். அப்போது பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து வெளியேறியது குறித்து பகிர்ந்துக்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
நானும் எனது மனைவி மேகன் மார்க்கலும் அரச குடும்பத்திலிருந்து வெளியேற முடிவு செய்தோம். உண்மையில் எங்களுக்கு வேறு வழி இல்லை. இந்த முடிவு ஏதோ இன்று நேற்று எடுத்ததல்ல. பல ஆண்டுகளாக பல மாதங்களாக இதுதொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடந்தன.
மகாராணி, காமன்வெல்த் மற்றும் ராணுவத்திற்கு தொடர்ந்து சேவகம் செய்ய விரும்புகிறேன். எனினும் பொதுநிதி இல்லாமல், அது சாத்தியமில்லை. நான் இதனை ஏற்றுக்கொள்கிறேன். இதன் பின்னராவது அமைதியான வாழ்க்கை கிடைக்கும் என நம்புகிறேன். எனது பாட்டி (மகாராணி எலிசபெத்), ராணுவத்துக்கு சேவை செய்வதே மிகப்பெரிய மரியாதை. அவர்கள் எனக்கு அளிக்கும் ஆதரவிற்கும், என் மீது அவர்கள் காட்டும் பாசத்துக்கும் நான் கட்டுப்பட்டுள்ளேன்” என்றார்
ஹாரி அரச குடும்பத்திலிருந்து வெளியேறியதால், அவரால் பொது நிதியை இனி பயன்படுத்த முடியாது. மேலும் அரசக் குடும்ப பட்டங்கள் மற்றும் பங்கிங்ஹாம் அரண்மனையையும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
இதையும் படிங்க: 'இளவரசர் ஹாரி, அவரது மனைவிக்கு வேலை வழங்கத் தயார்' - கலாய்த்த அமெரிக்க உணவகம்