உலகின் முதல் கோவிட்-19 தடுப்பூசியை ரஷ்யா தயாரித்து பயன்பாட்டிற்கு கொண்டுவந்ததாக அறிவித்தது. ஸ்புட்னிகக் V என்ற பெயரில் இந்த தடுப்பூசியை கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி ரஷ்யா அறிமுகம் செய்தது. ரஷ்யா கண்டுபிடித்த உலகின் முதல் செயற்கைகோளான ஸ்புட்னிக்கின் பெயரை இந்த முதல் தடுப்பூசிக்கு வைக்கப்பட்டது.
இந்த தடுப்பூசி சுமார் 92 விழுக்காடு செயல்திறன் கொண்டதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்து வந்தது. இந்நிலையில், அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தடுப்பூசியின் செயல்திறன் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார். அதில், எதிர்பார்த்ததை விட ஸ்புட்னிக் V சிறப்பான பலன்களைத் தருகிறது. சுமார் 95 விழுக்காடு பலன்களை இந்தத் தடுப்பூசி தருகிறது என்றார். இதை மேலும் 97 விழுக்காடாக உயர்த்த மருத்துவர்கள் முயற்சித்துவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரான்ஸ் அதிபருக்கு கரோனா பாதிப்பு!